துபாயில் சிக்கிய மலேசியர்களுக்கு தூதரகம் உதவி செய்யவில்லையா?

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர்,  மார்ச் 4: ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) துபாயில் சிக்கியிருந்த மலேசியருக்கு தூதரகம் உதவி செய்யவில்லை என்ற சமூக வலைதள குற்றச்சாட்டை வெளியுறவு அமைச்சகம் மறுத்துள்ளது.

அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், அபுதாபியில் உள்ள மலேசிய தூதரகமும், துபாயில் உள்ள துணைத் தூதரகமும் இடைவிடாமல் 24 மணி நேரமும் செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது. திடீர் வான்வழி மூடல் மற்றும் விமான ரத்து காரணமாக ஏற்பட்ட நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் உதவி வழங்கப்படுகிறது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் சுமார் 29,000 மலேசியர்கள் உள்ளனர். UAE-யில் மட்டும் 8,500 பேர் உள்ளதாகவும், இதில் 5,900 பேர் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அவசர மருத்துவத் தேவையுள்ளவர்கள், தங்குமிடம் அல்லது பணமில்லாதவர்கள், முதியவர்கள், சிறுவர் குடும்பங்கள் மற்றும் கடும் சிரமத்தில் இருப்பவர்கள் முன்னுரிமை பெறுகின்றனர்.

தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என்றும், உதவி தேவைப்படுவோர் அருகிலுள்ள தூதரகங்களை அல்லது 24 மணி நேர செயல்பாட்டு அறை (+603-8887 4570) மூலம் தொடர்புகொள்ளுமாறும் அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *