சட்டமன்றத்தில் மலாக்கா முதல்வர் தூங்கினாரா?

top-news
FREE WEBSITE AD

ஆயர்குரோ, ஜன.2-

மலாக்கா சட்டமன்றக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் அம்மாநில முதல்வர் டத்தோஸ்ரீ அப்துல் ராவுஃப் யூசோ தூங்கிக் கொண்டிருப்பதாகக் கூறி மஸ்ஜிட் தானா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ மாஸ் எர்மியாத்தி சும்சுடின் தமது முகநூல் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அது நெறிதவறிய செயலாகும் என்று ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஃபைருல் நிஸாம் ரோஸ்லான் சாடியுள்ளார்.

முதலமைச்சரின் நற்பெயருக்கும் கண்ணியத்திற்கும் இழுக்கு ஏற்படுத்தும் நோக்கத்தில் அக்காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்று அவர் விவரித்தார். ராவுஃப் தூங்கவில்லை என்பது சட்டமன்ற உறுப்பினர்களான எங்களுக்கு நன்றாகத் தெரியும். ஒரு வேளை, களைப்பு மிகுதியினால் அவர் கண்களைக் மூடியபடி இருந்திருக்கலாம் என்று ஃபைருல் சொன்னார்.

அந்தக் காணொளியை பரப்பியவர்கள் அதனை மீட்டுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.முதல்வர் பல வியாதிகளினால் அவர் அவதிப்பட்டு வருவதாகக் கூறப்படுவதையும் அவர் மறுத்தார்.

மலாக்கா சட்டமன்றத்தின் பதினைந்தாவது கூட்டத்தின் மூன்றாவது அமர்வு நேற்றுடன் முடிவடைந்தது. அதற்கு சற்று முன்பாகத்தான் அக்காணொளி பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டமன்றத்தில் பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்திருந்த இரண்டு பெண்கள் அக்காணொளியைப் பதிவுசெய்ததாகக் கூறப்படுகிறது. காணொளியை அப்பெண்கள் பதிவுசெய்து கொண்டிருந்ததைக் கண்ட அவைக் காவலர்கள் அவர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றினர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *