இன்று முதல் ஒரு லிட்டர் டீசல் RM2.15 என்ற மானிய விலையில் தொடரும்...
- Shan Siva
- 27 Jun, 2026
கோலாலம்பூர். ஜூன் 27: தீபகற்ப மலேசியாவில் தனியார் வாகனங்களுக்கு இன்று முதல்
ஒரு லிட்டர் டீசல் RM2.15 என்ற மானிய
விலையிலும், நாடு முழுவதும் ஜூலை 1
முதல் ஒரு லிட்டர் RM2.10 என்ற விலையிலும்
கிடைக்கும்.
ஜூலை 1 முதல் தொடங்கவிருக்கும் விரிவாக்கப்பட்ட டீசல் மானியத் திட்டத்தில்
செய்யப்படும் பல மாற்றங்களின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
டீசல் வாகன உரிமையை மாற்றுவதற்கான கட்டணத்தில் மூன்று மாத கால விலக்கு;
டீசல் வாகனத்தை உண்மையில் பயன்படுத்தும் குடும்ப உறுப்பினர்கள் மானியத்தைப்
பெற அனுமதித்தல்;
குடும்ப உறுப்பினர்களை உள்ளடக்கும் வகையில் பதிவு ஆவணங்களைப் புதுப்பிக்க
வழிவகை செய்தல்; மற்றும் சிறு வணிகங்கள், தினசரிப் பயணம்
மற்றும் கிராமப்புற நடவடிக்கைகளுக்காக நிறுவனங்களுக்குச் சொந்தமான பிக்கப்
டிரக்குகள் மற்றும் டீசல் இன்ஜின் கார்களைப் பயன்படுத்தும் தனியார் பயனர்களுக்கும்
BUDI டீசல் திட்டத்தை
விரிவுபடுத்துதல் போன்றவை இத்திட்டங்களில் அடங்கும்.
இந்தக் கட்டண விலக்கு,
டீசல் வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களை உண்மையில் பயன்படுத்துபவர்களின்
பெயர்களைப் பதிவு ஆவணங்களில் சேர்க்க உதவும் என்று நிதி அமைச்சகம்
தெரிவித்துள்ளது.
மானியத் தகுதிக்கான அளவுகோல்களில் வாகனப் பதிவு மற்றும் செலுத்த வேண்டிய சாலை
வரி குறித்த தரவுகளும் அடங்குவதால், சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ), ஜூலை 4 முதல் ஜூலை 26 வரை, வார இறுதி நாட்களில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து மாநில மற்றும்
நகர்ப்புற மாற்ற மைய JPJ
அலுவலகங்களிலும் சேவை மையங்களைத் திறக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



