அதிமுகவை அமைச்சரவையில் சேர்த்தால் ஆதரவு மறுபரிசீலனை - பெ.சண்முகம் எச்சரிக்கை
- Surendran Sumdraraj
- 21 May, 2026
திருவாரூர், மே 21-
தவெக அரசின் அமைச்சரவையில் அதிமுக உறுப்பினர்களுக்கு இடமளிக்கப்பட்டாலோ அல்லது அதிமுகவின் ஆதரவை பெற்று ஆட்சி தொடர முயன்றாலோ, தவெகவிற்கு வழங்கியுள்ள ஆதரவை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக அரசியல் வட்டாரங்களில், தவெக அரசின் அடுத்த கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில் அதிமுக ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் இடம்பெறலாம் என்ற தகவல்கள் பரவி வரும் நிலையில், இந்த விவகாரம் அரசியல் களத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பெ.சண்முகம், “தவெகவிற்கு நாங்கள் ஆதரவளித்தது மீண்டும் தேர்தல் ஏற்படக்கூடாது என்பதற்காகவும், பாஜக ஆதரவு ஆட்சி அல்லது ஆளுநர் ஆட்சி போன்ற சூழல் உருவாகாமல் தடுக்கவும் தான். மக்கள் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் எதிராகவே தீர்ப்பளித்துள்ளனர்” என்று தெரிவித்தார்.
மேலும் அவர், “அதிமுகவை ஆட்சியில் இணைத்துக்கொள்வது மக்கள் தீர்ப்புக்கு எதிரானதாக அமையும். நல்லாட்சிக்கு அது பாதகமாக இருக்கும். இத்தகைய சூழ்நிலை ஏற்பட்டால், எங்களது ஆதரவு நிலைப்பாட்டை நிச்சயமாக மறுபரிசீலனை செய்வோம்” என்றும் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



