“சினிமா இல்லையென்றால் அமெரிக்காவில் செட்டில் ஆகியிருப்பேன்” – Mirnalini Ravi
- Surendran Sumdraraj
- 15 May, 2026
தமிழ் திரைப்பட நடிகை Mirnalini Ravi சமீபத்தில் அளித்த பேட்டியில், “சினிமா துறைக்கு வரவில்லை என்றால் அமெரிக்காவில் செட்டில் ஆகியிருப்பேன்” என்று தெரிவித்துள்ளார். தகவல் தொழில்நுட்ப துறையில் நல்ல வேலை வாய்ப்பு இருந்ததால், வெளிநாட்டில் வாழும் திட்டமும் இருந்ததாக அவர் கூறியுள்ளார்.
டப்ஸ்மாஷ் மற்றும் சமூக வலைத்தள வீடியோக்கள் மூலம் பிரபலமான மிருணாளினி ரவி, பின்னர் திரைப்பட வாய்ப்புகளைப் பெற்றார். ஆரம்பத்தில் சினிமாவையும், ஐ.டி. வேலையையும் ஒன்றாக மேற்கொண்டதாகவும், பின்னர் திரைப்பட வாய்ப்புகள் அதிகரித்ததால் முழுநேர நடிகையாக மாறியதாகவும் அவர் முன்பு பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.
மேலும், குடும்பத்தினர் முதலில் சினிமா துறையில் சேருவதற்கு தயக்கம் காட்டியதாகவும், நிலையான வாழ்க்கைக்காக வெளிநாட்டில் வேலை செய்ய வேண்டும் என்பதே அவர்களின் விருப்பமாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். ஆனால் தனது ஆர்வத்தை பின்பற்றி சினிமா துறையை தேர்வு செய்தது தற்போது மகிழ்ச்சியளிப்பதாக கூறியுள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



