மத்திய - மாநில ஆளும் கட்சிகளுக்கு இடையேயான வேறுபாடுகள் நட்புறவுக்குத் தடையாக இருக்கக்கூடாது! - அன்வார்
- Shan Siva
- 08 Aug, 2026
கோலாலம்பூர், ஆக 8: கூட்டாட்சி மற்றும் மாநில அரசுகளை ஆளும் அரசியல் கட்சிகளுக்கு இடையேயான வேறுபாடுகள், அவற்றுக்கிடையேயான நட்புறவுக்கும் ஒத்துழைப்புக்கும் தடையாக இருக்கக்கூடாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுகொண்டுள்ளார்.
அரசாங்கத்தின் முயற்சிகளால் மக்கள் தொடர்ந்து பயனடைவதை உறுதிசெய்ய, நெருங்கிய உறவுகளும் ஒத்துழைப்பும் அவசியம் என்று அவர் கூறினார்.
நமது அரசாங்க அமைப்புக்கு நெருங்கிய ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. நமக்கு மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம், வெவ்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம், ஆனால் இந்த வேறுபாடுகள், மக்களுக்கு நேரடியாகப் பயனளிக்கும் நட்புறவு, நல்லெண்ணம் மற்றும் ஒத்துழைப்புக்குத் தடையாக இருக்கக்கூடாது என்று குறிப்பிட்டார்.
அதனால்தான், மலாக்காவில் அளிக்கப்பட்ட அன்பான வரவேற்புக்கும், மலாக்கா அரசாங்கம் மற்றும் மலாக்கா வரலாற்று நகர மன்றம் (MBMB) வழங்கிய நெருங்கிய ஒத்துழைப்புக்கும் மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார்.
மலேசியா மடானி கருத்தாக்கத்திற்கு இணங்க, ஒரு நிலையான நிலப்பரப்பை உருவாக்கும் நமது இலட்சியம், எதிர்காலத்தில் செயலாக மாற்றப்பட்டு, உறுதியான முடிவுகளைத் தரும் என்று நம்புகிறோம் என்று அவர் கூறினார்.
நேற்று இரவு குரூபோங்கில் உள்ள ஹாங் ஜெபாட் மைதானத்தில், 'Landskap Lestari, Malaysia Madani' (நிலையான நிலப்பரப்பு, மலேசியா மடானி) என்ற கருப்பொருளில் நடைபெற்ற தேசிய நிலப்பரப்பு தினக் கொண்டாட்டத்தைத் தொடங்கி வைத்தபோது அவர் இவ்வாறு கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



