மாடுகளைத் தாக்கிய புலி! பொறி வைத்துப் பிடிக்க திட்டம்
- Shan Siva
- 06 Dec, 2025
கோலாலம்பூர், டிச 6: பேராக்கின் செம்மோர் அருகே உள்ள தானா ஈத்தாமில்
உள்ள புக்கிட் பாங்காங்கில் புலி தாக்குதல் நடந்ததாக சந்தேகிக்கப்படும் புகார்
கிடைத்ததை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
நேற்று இரண்டு
பசுக்கள் மாண்டதோடு, ஐந்து பசுக்கள் காணாமல் போனதாக பெர்னாமா
தெரிவித்துள்ளது.
ஒரு
குடியிருப்பாளர் தனது இரண்டு பசுக்கள் உடலில் கடிபட்ட அடையாளங்களுடன் இறந்து கிடந்ததையும், மேலும் பல மாடுகள் மாலை 6.30 மணியளவில் காணாமல் போனதாகவும் கூறியதாக பேராக்
காவல்துறைத் தலைவர் நூர் ஹிசாம் நோர்டின் தெரிவித்தார்.
இதனை அடுத்து வனவிலங்கு மற்றும் தேசிய
பூங்கா துறையான பெர்ஹிலித்தான் அப்பகுதியில் புலிகள் இருப்பதைக் கண்டறிய கேமரா
பொறிகளை நிறுவியுள்ளதாக அவர் கூறினார்.
அங்கு
வசிப்பவர்களின் பாதுகாப்பைப் பாதுகாக்க காவல்துறை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக அவர்
தெரிவித்தார்.
குடியிருப்பாளர்களும்
விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் வனப்பகுதிகளுக்குள்
நுழைவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



