பெர்சாத்துவுக்கு எதிராக உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
- Shan Siva
- 18 Jun, 2026
கோலாலம்பூர், ஜூன் 18: பெர்சாத்து கட்சியின் இரண்டு வங்கிக் கணக்குகளின்
முடக்கத்தை நீக்கக் கோரி தாக்கல் செய்த வழக்கில், உயர்நீதிமன்றம் அக்கட்சிக்கு எதிராகத் தீர்ப்பளித்துள்ளது.
மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான
MACC தனது
அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக பெர்சாத்து நிரூபிக்கத் தவறிவிட்டதாக நீதிபதி Aliza
Sulaiman, கூறினார்.
மேலும், கட்சித் தலைவர் Muhyiddin Yassin
மீது மூன்று ஆண்டுகளுக்கு முன்பு
நடைபெற்ற விசாரணையின் போது, அவருக்கு
வெளிநாடு செல்லத் தடை விதிக்குமாறு குடிநுழைவுத் துறையிடம் MACC கோரிக்கை வைத்தது சட்டபூர்வமானதே என்றும்
நீதிபதி கூறினார்..
குற்றவியல் விசாரணை
எந்தத் தடையும் இன்றி நடைபெறுவதை உறுதி செய்வதற்காக MACC இத்தகைய கோரிக்கையை விடுக்கலாம், என்று
நீதிபதி தெரிவித்தார்.
இந்த வழக்கில்
நீதிமன்றம் செலவுத்தொகை குறித்து எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.
தற்போது,
Muhyiddin Yassin மீது
அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான நான்கு குற்றச்சாட்டுகளும், RM232.5 மில்லியன் மற்றும் RM195 மில்லியன் தொடர்பான இரண்டு பணமோசடி
குற்றச்சாட்டுகளும் விசாரணையில் உள்ளன.
2023 மே 29ஆம் தேதி, பெர்சாத்துவின் நிர்வாகச் செயலாளர் Suhaimi
Yahya, கட்சியின் இரண்டு
வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதை எதிர்த்து நீதித்துறை மறுஆய்வு மனுவைத் தாக்கல்
செய்தார்.
2023 ஏப்ரலில், சட்டப்படி தேவையான பறிமுதல் உத்தரவு
இன்றி CIMB மற்றும்
AmBank வங்கிக் கணக்குகள்
முடக்கப்பட்டதாக பெர்சாத்து வாதிட்டது.
அத்துடன், முடக்க உத்தரவை மாற்றவோ ரத்து செய்யவோ MACC-க்கு பல கடிதங்கள் அனுப்பப்பட்டதாகவும்,
ஆனால் பதிலளிப்பதில் தாமதம்
ஏற்பட்டதாகவும் கட்சி கூறியது.
எனினும், 2023
பிப்ரவரி 21 மற்றும் மார்ச் 1 ஆகிய தேதிகளில் MACC பதில் அளித்திருப்பதற்கான ஆவணங்கள் இருப்பதாக
நீதிபதி குறிப்பிட்டார். கணக்குகள் தொடர்பான விசாரணை தொடர்ந்துகொண்டிருப்பதால்
கோரிக்கைகளை ஏற்க முடியாது என MACC தெரிவித்திருந்தது.
MACC நியாயமான
காலத்திற்குள் பதிலளித்துள்ளது. மேலும், இத்தகைய விண்ணப்பங்களுக்கு எத்தனை நாளில் பதில் அளிக்க
வேண்டும் என சட்டத்தில் காலக்கெடு குறிப்பிடப்படவில்லை என்று நீதிபதி அலிசா சுலைமான் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



