இலகு ரக விமானம் விபத்து! இருவர் காயம்
- Shan Siva
- 08 Dec, 2025
கோலாலம்பூர், டிச 8: நேற்று தைப்பிங்கில் உள்ள டெக்கா விமான நிலையத்திற்கு
அருகிலுள்ள திறந்தவெளிப் பகுதியில் இலகுரக விமானம் விபத்துக்குள்ளானதில் ஒரு
விமானியும் அவரது பயிற்சியாளரும் காயமடைந்தனர்.
விமானத்தில் இயந்திரக்
கோளாறு ஏற்பட்டதாகவும், திறந்தவெளிப் பகுதியில்
அவசரமாக தரையிறங்க வேண்டியிருந்ததாகவும் தைப்பிங் காவல்துறைத் தலைவர் நசீர்
இஸ்மாயில் தெரிவித்தார்.
46 மற்றும் 40 வயதுடைய பாதிக்கப்பட்ட இருவரையும் மேலதிக
சிகிச்சைக்காக தைப்பிங் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர், அவர்களின் உடல்நிலை சீராக உள்ளது என்று அவர் கூறினார்.
நேற்று காலை 10.30
மணியளவில் NG MERSS 999 அவசர ஹாட்லைன் எண் மூலம் வந்த அழைப்பைத் தொடர்ந்து விபத்து
குறித்த தகவல் போலீசாருக்குக் கிடைத்ததாக நசீர் இஸ்மாயில் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



