சாலையில் சண்டை... தேடும் காவல்துறை!
- Shan Siva
- 15 Feb, 2025
கோலாலம்பூர், பிப் 15: நேற்று ஜோகூர் காஸ்வே சாலையில் சண்டையிட்டுக் கொண்டிருந்த இரண்டு ஆண்களை போலீசார் தேடி வருகின்றனர். சமூக ஊடகங்களில் இது தொடர்பான வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.
இருவரையும் சம்பவ
இடத்தில் சாட்சிகளாகக் கொண்டவர்களை அடையாளம் காண விசாரணை நடைபெற்று வருவதாக ஜொகூர் பாரு தெற்கு காவல்துறைத் தலைவர் ரவூப் செலாமட் தெரிவித்துள்ளார்.
தகவல் தெரிந்த
பொதுமக்கள் காவல்துறையை நாடலாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
டொயோட்டா வெல்ஃபயர் என்று நம்பப்படும் ஒரு MPV காரில் வந்த இரண்டு ஆண்கள், காஸ்வே சாலையின் நடுவில் நின்று தங்கள் காரில் இருந்து இறங்கி வாக்குவாதம் செய்வதை வீடியோ காட்டுகிறது. பின்னர் அவர்கள் மோதலில் ஈடுபட்டுள்ளனர்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



