தாமஸ் கோப்பை அணியில் கலந்து கொள்ள ஜி ஜியாவின் நிபந்தனைகள்!

top-news
FREE WEBSITE AD

ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஷட்லர் லீ ஜி ஜியா, ஏப்ரல் மாதம் நடைபெறும் தாமஸ் கோப்பை அணியில் சேர மலேசிய பேட்மிண்டன் சங்கத்திடம் (BAM) பல நிபந்தனைகளை விதித்துள்ளார்.தேசிய அணியில் சேர்வதா? இல்லையா? என்பதை முடிவு செய்ய 27 வயதான ஜி ஜியா ஒரு வாரம் அவகாசம் கேட்டுள்ளதாகவும், வெள்ளிக்கிழமை இறுதி முடிவு எதிர்பார்க்கப்படுவதாகவும் பிஏஎம் செயல்திறன் குழுத் தலைவர் லீ சோங் வெய் தெரிவித்தார்.

"நாங்கள் லீ ஜி ஜியாவுடன் கலந்து ஆலோசித்ததில் பல விசயங்கள் உள்ளன, நாங்கள் ஏற்கனவே லீ ஜி ஜியாவிடம் எங்கள் பதிலை அளித்துள்ளோம்."இந்த விஷயத்தை நான் பிஏஎம் தலைவர் (தெங்கு சஃப்ருல் அஜீஸ்) மற்றும் கவுன்சில் உறுப்பினர்களுடனும் விவாதித்தேன். இப்போது எங்களுக்கு ஒரு புதிய நிர்வாகம் உள்ளது, நாங்கள் ஜி ஜியாவுக்கு என்ன வழங்க முடியும் என்பதைப் கூறுவோம்," என்று அவர் கூறியதாக பெரிட்டா ஹரியன் தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை புக்கிட் கியாராவில் உள்ள தேசிய பேட்மிண்டன் அகாடமியில் ஒலிம்பிக் வெண்கலப் பதக்கம் வென்ற வீரரை சோங் வெய் சந்தித்தார்.தனது வாழ்க்கையைத் தக்க வைத்துக் கொள்ள, முதுகில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சைக்குப் பதிலாக பிசியோதெரபியைத் தேர்ந்தெடுத்த பிறகு, ஜி ஜியா கடந்த ஆண்டு ஆறு மாத காலம் காயம் காரணமாக ஓய்வு பெற்றார்.

ஜி ஜியாவுடனான சந்திப்பு சுமூகமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் இருந்ததாகவும், ஆனால் ஏப்ரல் 24 முதல் மே 3 வரை டென்மார்க்கின் ஹார்சன்ஸில் நடைபெறும் தாமஸ் கோப்பை அணிக்கான திட்டங்களை BAM இறுதி செய்வதால் நேரம் குறைவு என்றும் சோங் வெய் கூறினார்.வீரர்களின் பட்டியல் மற்றும் பயிற்சித் திட்டங்களை நாங்கள் தீர்க்க வேண்டியிருப்பதால், லீ ஜி ஜியா விரைவில் எங்களுக்கு இறுதி பதிலை வழங்குவார் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று மூன்று முறை ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கம் வென்றவரான சோங் வெய் கூறினார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜி ஜியாவின் பங்கு மலேசிய அணியை வலுப்படுத்தும் என்று சோங் வெய் நம்பினார், நம் நாட்டு சார்பாக நான்கு ஒற்றையர் வீரர்களையும் மூன்று ஜோடிகளையும் ஹார்சென்ஸுக்கு அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *