திருமண விழாவுக்கு, நடிகை த்ரிஷா உடன் விஜய்!

top-news
FREE WEBSITE AD

திருமண விழாவுக்கு, நடிகை த்ரிஷா உடன் விஜய் வந்திருந்தது, தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.விஜய் குறித்து, தொண்டர்கள், ரசிகர்களே கடுமையாக விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

விஜய் திருமணத்தை மீறி, நடிகை ஒருவருடன் தொடர்பில் இருக்கிறார் என்று அவரது மனைவி சங்கீதா குற்றம்சாட்டியிருந்தார். இந்த விஷயத்திற்காக அவர் விவாகரத்தும் கோரியிருந்தார். செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி தாக்கல் செய்திருந்த விவாகரத்து மனுவில், அவர் கூறியிருந்த விஷயங்கள் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியிருந்தது.2021ம் ஆண்டு ஏப்ரலில் விஜய் ஒரு நடிகையுடன் தொடர்பு வைத்திருந்ததை கண்டறிந்ததாகவும், இது தனது திருமண நம்பிக்கையை முற்றிலும் சிதைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

விஜய் முதலில் அந்த உறவை முடிக்க உறுதியளித்தாலும், பின்னர் அதைத் தொடர்ந்ததாக சங்கீதா குற்றம் சாட்டியுள்ளார். மேலும், அந்த நடிகை விஜய்யுடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டதை விஜய் எதிர்க்காததும் மன உளைச்சலை ஏற்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

விஜய்யின் வருமானம் மற்றும் சமூக அந்தஸ்துக்கு ஏற்ப நிரந்தர ஜீவனாம்சம் வழங்கப்பட வேண்டும் என சங்கீதா கோரியுள்ளார். வழக்கு முடியும் வரை அல்லது மாற்று வசதி செய்து தரும் வரை நீலாங்கரையில் உள்ள வீட்டில் வசிக்க அனுமதி கேட்டுள்ளார்.இந்த விவாகரத்து வழக்கிற்கான முழுச் செலவையும் விஜய்யே ஏற்க வேண்டும் என சங்கீதா வலியுறுத்தினார். மேலும், தேவையானால், குறிப்பிட்ட நடிகையை இரண்டாம் எதிர்மனுதாரராகச் சேர்க்க உரிமை வேண்டும் எனவும் அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.

குடும்ப கௌரவம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தை கருதி, ரகசிய விசாரணை மற்றும் ஊடக விவாதங்களுக்குத் தடை விதிக்க சங்கீதா கோரிக்கை விடுத்துள்ளார். பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும், விஜய் தனது நடத்தையை மாற்றிக் கொள்ளாததால் இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறினார்.

மேலும், சங்கீதா மீது விஜய் கடுமையாக நடந்ததாகவும், அவருடன் பேச்சுவார்த்தைகளைத் தவிர்த்ததாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வீட்டின் ஒரு பகுதியிலேயே தனிமைப்படுத்தி வாழ வைத்ததை மனரீதியான சித்திரவதை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.இப்படி இருக்கையில்,  சென்னையில் நடந்த திருமண நிகழ்சிக்கு நடிகை த்ரிஷாவுடன் விஜய் வந்திருந்தார். இதற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.

தற்போது தவெகவினர் பலரும் விஜய்யின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். விஜய்யின் அனைத்து செயல்களுக்கும் உடன் இருந்து சமாளித்தோம். ஆனால், இந்த விஷயத்திற்கெல்லாம் சமாளிக்க முடியாது என்று கூறி, விஜய்க்கு வெளிப்படையாகவே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *