ராணுவ ஊழல் விவகாரம்! விசாரணையில் தலையிடவில்லை! – அன்வார்
- Shan Siva
- 16 Jan, 2026
கோலாலம்பூ, ஜன 16: ஒருமைப்பாட்டை மீட்டெடுக்கவும், நடைமுறைகளுடன் முழுமையாக இணங்குவதை உறுதி செய்யவும், அனைத்து இராணுவ மற்றும் காவல்துறை கொள்முதல் முடிவுகளையும் உடனடியாக முடக்க பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார்.
ஆயுதப்படைகள்
சம்பந்தப்பட்ட அண்மைய ஊழல் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது.
செயல்முறை முழுமையாக
இணங்குவதை உறுதி செய்யும் வரை, அனைத்து இராணுவ அல்லது
காவல்துறை கொள்முதல் முடிவுகளையும் அல்லது வேறு ஏதேனும் முடிவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும், மறுசீரமைக்க வேண்டும், தற்போதைக்கு முடக்க வேண்டும் என்று அன்வார் கூறினார்.
நடந்துகொண்டிருக்கும்
விசாரணைகளில் அரசாங்கம் தலையிடாது என்பதை எடுத்துரைத்த அதே வேளையில், தவறான நடத்தை தொடர்பான அண்மைய முன்னேற்றங்கள்
குறித்து பிரதமர் தனது கவலையை தெளிவுபடுத்தினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



