57,000 வெளிநாட்டினர்கள் கைது! 1720 நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு!
- THINAGAREN SANGGAREN
- 22 Sep, 2026
செப்டம்பர் 22,
தேசிய குடிநுழைவு துறையினர் மேற்கொண்ட தொடர் சோதனையில் சட்டவிரோதமாக மலேசியாவில் தங்கியிருந்த 57,000 வெளிநாட்டினர்களைக் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 9700 சோதனைகளை மேற்கொண்டுள்ளதாகவும் 130,000 க்கும் மேலான வெளிநாட்டினர்களை சோதனையிட்டாகவும் குடிநுழைவு துறை தெரிவித்துள்ளது.
22,000கும் மேலான வெளிநாட்டினர்கள் மலேசிய எல்லையில் சட்டவிரோதமாக நுழையும் போதே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குடிநுழைவு துறை தெரிவித்துள்ளது. இவ்வாண்டு தொடக்கத்திலிருந்து ஒரு நாளுக்கு 37 சோதனைகளை குடிநுழைவு துறை மேற்கொண்டுள்ளதாகவும் செப்டம்பர் 17 வரையில் 9,700 சோதனைகளை நிகழ்த்தியுள்ளதாகவும் குடிநுழைவு துறை தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமாக மலேசியாவுக்குள் வெளிநாட்டினர்களை அழைத்து வந்ததாக சந்தேகிக்கப்படும் 1720 நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குடிநுழைவு துறை தெரிவித்துள்ளது. நிறுவனங்களுடன் தொடர்புடைய 260 முதலாளிகள் கைது செய்யப்படிருப்பதாகவும் குடிநுழைவு துறை தெரிவித்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



