அடிமையாக இருந்த 8 இந்தோனேசிய பணிப்பெண்கள் மீட்பு!
- THINAGAREN SANGGAREN
- 19 Apr, 2026
ஏப்ரல் 19,
சிலாங்கூரில் முறையான ஆவணங்கள் இருந்தும் வெளிநாட்டுப் பெண்களை அடிமையாக வேலை செய்யும்படி கட்டாயப்படுத்திய 28 பேர் கைது செய்யப்பட்டதுடன் 8 இந்தோனேசியப் பணிப்பெண்களைச் சிலாங்கூர் குடிநுழைவுத் துறை மீட்டுள்ளது. சிலாங்கூரின் Telok Panglima Garang, Jenjarom, Kajang, Shah Alam, Gombak, Cheras, Batu Caves, Seri Kembangan ஆகிய பகுதிகளில் காலை 11 மணி முதல் மேற்கொள்ளப்பட்ட தொடர் சோதனை நடவடிக்கையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜென்ஜாரோமில் உள்ள ஒரு வீட்டிலிருந்து தாய் மகள் என 2 இந்தோனேசியப் பெண்கள் மீட்கப்பட்டதுடன் 2 உள்ளூர் பெண்களைக் கைது செய்ததாகவும் செராஸில் 4 இந்தோனேசியப் பெண்கள் மீட்கப்பட்டதுடன் 2 ஏமன் நாட்டு ஆண்களும் 2 இந்தோனேசியப் பெண்களும் கைது செய்யப்பட்டதாகவும் சிலாங்கூர் குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது.
அவர்களுடன் தொடர்பில் இருந்ததாக நம்பப்படும் 10 வெளிநாட்டு ஆண்களும் 8 வெளிநாட்டுப் பெண்களும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களிடமிருந்து 7 கைத்தொலைப்பேசிகளும் ரொக்கப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக சிலாங்கூர் குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



