சட்டவிரோதமாகக் குடியேறிய 14 வெளிநாட்டினர்கள் கைது!
- Sangeetha K Loganathan
- 24 Jan, 2025
ஜனவரி 24,
துப்புரவு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்களிடம் திரங்கானும் மாநிலக் குடிநுழைவுத் துறையினர் மேற்கொண்ட சோதனையில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பகுதி நேரமாகப் பல்வேறு வேலைகளைச் செய்து வரும் Bangladesh, Myanmar , Pakistan ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக Terengganu மாநிலக் குடிநுழைவுத் துறை இயக்குநர் Mohd Yusri Mohd Nor தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்களிடம் எந்தவோர் ஆவணங்களும் இல்லை என்பதால் அவர்கள் தங்கியிருந்த பகுதியிலும் சோதனையிட்டதாகவும் கைது செய்யப்பட்டவர்கள் 24 முதல் 54 வயதினர் என்றும் தெரிய வந்துள்ளது.
வெளிநாட்டினர்கள் தங்கியிருந்த பகுதியில் 34 பேரைச் சோதனையிட்டதாகவும் அதில் 14 பேர் கைது செய்யப்பட்டதாகவும் கைது செய்யப்பட்டவர்கள் திராங்கானும் குடிநுழைவுத் துறை முகாமில் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும் Terengganu மாநிலக் குடிநுழைவுத் துறை இயக்குநர் Mohd Yusri Mohd Nor தெரிவித்தார்.
Imigresen Terengganu menahan 14 warga asing berusia 24 hingga 54 tahun tanpa dokumen sah yang bekerja secara haram sebagai pekerja sambilan. Mereka dikenal pasti berasal dari Bangladesh, Myanmar dan Pakistan selepas pemeriksaan ke atas 34 orang.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



