இம்மானுவேல் சேகரனார் நினைவுநாள் – தமிழக அரசு சார்பில் மரியாதை
- Surendran Sumdraraj
- 11 Sep, 2026
ராமநாதபுரம், செப். 11 –
தியாகி இம்மானுவேல் சேகரனாரின் நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக அரசு சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
இம்மானுவேல் சேகரனாரின் நினைவை போற்றும் வகையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பரமக்குடிக்கு வருகை தந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் நிர்மல் குமார், அருண்ராஜ், பிரபு, மதன் ராஜா, ராஜீவ், விக்னேஷ் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இவர்களுடன் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
முதலில் இம்மானுவேல் சேகரனாரின் புதிய மணி மண்டபத்தில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதன்பின்னர் அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளும் இம்மானுவேல் சேகரனாரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்த உள்ளனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



