பொங்கல் எனும் அறிவியல் திருவிழா!

top-news

லட்சுமி சுப்ரமணியம்

பொங்கல் பண்டிகை என்பது அருவடைத்திருநாள், தமிழர் திருநாள் என்று நாம் உயர்த்தி கொண்டாடும் அதே வேளையில் அதன் பின் உள்ள அறிவியலையும் உணர்ந்து கொண்டாட வேண்டும். நமது பாரத பண்பாட்டைப் பொறுத்தவரை வெறும் நம்பிக்கை என்ற அளவில் எந்தவொரு விஷயத்தையும் சுருக்கி விட முடியாது. எல்லாமே அறிவியல் தான். நமது முன்னோர்கள் பூமியின் வட்டப் பாதையை துள்ளியமா கணித்ததுள்ளதை போல சூரியனின் சுழற்சியையும், வட்டப் பாதையையும் மிகவும் துள்ளியமாக கணக்கிட்டுள்ளார்கள். சூரியன் வடக்கு நோக்கி சஞ்சரிக்கின்ற ஆறு மாதக் காலம், தை முதல் ஆனி வரை,   *உத்ராயணம் என்று அழைக்கப்படுகிறது. இதுதான் தேவ வருடத்தின் ஒரு நாளின் பகல் பொழுது. அதைப்போல சூரியன் தெற்கு நோக்கி சஞ்சரிக்கின்ற ஆறு மாத காலம், ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை, தட்சிணாயனம் என்று அழைக்கப்படுகின்றது இதுதான் தேவ வருடத்தின் இரவு பொழுது. இவ்வாறாக சூரியனின் சுழற்சியின் அடிப்படையிலான தேவ வருடத்தின் ஒரு நாள் என்பது நமக்கு ஒரு வருடம்.இதை இன்றைய அறிவியலும் ஏற்றுக்கொள்கிறது என்று கூறுவதை விட இன்றைய அறிவியல் இதை இப்போதுதான் கண்டுபிடிக்கவே ஆரம்பித்திருக்கிறது என்று கூறுவதுதான் பொருத்தமாக இருக்கும். காலத்தின் அளவு என்பது பிரபஞ்சத்தின் பல்வேறு அடுக்குகளில் வெவ்வேறாக இருக்கும் என நவீன அறிவியல் கூறுகிறது. ஆனால் அதன் துல்லியமான காலக் கணக்கீட்டை அறிய நவீன அறிவியல் நம் வேதங்களையும், நமது ஆன்மீகக் கருத்துக்களையும்தான் நாடுகிறது.

அதாவது ஒளி ஆண்டில் (லைட் இயர்) பயணிக்கின்ற ஒருவன் 10 நாட்கள் கழித்து இந்த பூமிக்கு திரும்ப வரும்பொழுது இங்கு பத்து வருடங்களுக்கு மேல் கடந்திருக்கும் என்று ஆராய்ந்து சொல்கின்றது இன்றைய அறிவியல். இதை   நமது வேதங்கள், நமது தமிழ் ஆகமங்கள் சொல்லி வைத்துவிட்டு போன அறிவியல் கருத்துக்கள்.பூமியில் எப்படி காலை 6 மணிக்கு சூரிய உதயத்துடன் ஒரு நாள் துவங்குகிறதோ, அதை போல் தேவ வருடத்தின் ஒரு நாளின் பகல் நேரத்தின் தொடக்கம் என்பது நமக்கு தை மாதமாக இருக்கிறது. அதனால் தான் அதை நம் தமிழர் பண்பாடு பொங்கல் விழாவாக சூரியனுக்கு விழா எடுத்துக் கொண்டாடுகிறது. ஆகவே நமது தைத்திருநாள் என்பது வெறும் அறுவடைத்திருநாள் மாத்திரம் அல்ல. அது தேவ வருடத்தின் ஒரு நாளின் தொடக்கம். அதாவது சூரியனின் காலைப்பொழுது என்ற அறிவியல் புரிதல் நமக்கு இருக்க வேண்டும்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *