பெர்சாத்து மகளிர் தலைவர் பதவியிலிருந்து பின்வாங்கும் ரினா ஹருன்!

- Shan Siva
- 03 Oct, 2024
கோலாலம்பூர், அக் 3: பெர்சாத்து மகளிர் தலைவர் ரினா ஹருன், அடுத்த மாதம் நடைபெறவுள்ள கட்சித் தேர்தலில் தனது பதவியை தற்காக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சருமான அவர், கடந்த வாரம் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்சித் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் போது, வரும்வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகளிர் பிரிவின் துணைத் தலைவர் மாஸ் எர்மியட்டி சம்சுடின் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *