மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையில் விண்ணப்பிக்கும் வழிமுறைகள்!

top-news
FREE WEBSITE AD

பிப்ரவரி 27

இந்திய ஆய்வியல் துறை மலாயாப் பல்கலைக்கழகத்தில், கலை மற்றும் சமூக அறிவியல் புலத்தின்கீழ் செயல்படும் துறையாகும். இத்துறை 1956-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டு, 70 ஆண்டுகளாகப் செயல்பட்டு வருகின்றது. இத்துறை தோற்றுவிக்கப்பட்ட காலக்கட்டம் முதல் அறிவுப்பூர்வமான இந்தியச் சமுதாயத்தை உருவாக்கி வருகின்றது. இத்துறையானது, தமிழியியல், இந்தியவியல் என இரு பிரிவாக பிரிவாக வகுக்கப்பட்டுள்ளது. தமிழியியல் பிரிவில் பாடங்கள் தமிழ்மொழியில் போதிக்கப்படுகின்றன. தமிழியல் பிரிவு தமிழ் இலக்கணம், சங்க கால இலக்கியம், இடைக்கால இலக்கியம், தற்கால இலக்கியம், தமிழர்ப் பண்பாடு, வாழ்வியல் முறை போன்ற செய்திகளை உள்ளடக்கியது. இந்தியவியல் பிரிவில் பாடங்கள் ஆங்கிலம் அல்லது மலாய்மொழியில் போதிக்கப்பட்டு வருகின்றன. இந்தியவியல் பிரிவு இந்திய நாகரிகம், தமிழர்ப் பண்பாடு, மலேசிய இந்தியர்களின் சமூகவியல், அரசியல், பொருளாதாரவியல் போன்ற செய்திகளை உள்ளடக்கியுள்ளது. தேசியக் கல்வித் திட்டத்திற்கு ஏற்பவும், 21-ஆம் நூற்றாண்டின் தேவைக்கேற்பவும் இந்திய ஆய்வியல் துறை தன் கற்றல், கற்பித்தல் முறைகளையும், பாடத்திட்டங்களையும் மாற்றியுள்ளது. இத்துறையில் கற்பிக்கப்படும் பாடங்கள் அனைத்தும், மாணவர்களுக்கு எதிர்காலத்தில் வேலை வாய்ப்புகள் வழங்கும் வகையிலும், அவர்களின் வாழ்வியலுக்குப் பயன்படும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்திய ஆய்வியல் துறையில் போதிக்கப்படும் பாடங்கள் மாணவர்களுக்கு அரசாங்கம் மற்றும் தனியார் துறை இரண்டிலும் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகின்றது. சான்றாக, தகவல் அமைச்சகம், தொடர்பு மற்றும் ஊடக அமைச்சகம், உள்துறை அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம், கலாச்சார அமைச்சகம் மற்றும் சமூகம், இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகம், கல்வி மற்றும் விவசாய அமைச்சகம் போன்ற துறைகளிலும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகள் அமையும். அவ்வகையில், இத்தகைய பயனுள்ள துறையைத் தேர்ந்தெடுத்து, இன்னும் பல நன்மைகளைப் பெற விருப்பம் உள்ள மாணவர்கள் யூ.பி.யூ-இல் தாராளமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் STPM, MATRIKULASI, DIPLOMA & A-LEVEL போன்றவையில் குறைந்தபட்சம் 3.00 PNGK அடைவுநிலையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மலாயாப் பல்கலைக்கழகம், இந்திய ஆய்வியல் துறை குறித்து கூடுதல் விளக்கம் தேவைப்படுமாயின், கொடுக்கபட்ட தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

தொடர்பு கொள்ள வேண்டிய எண் : முனைவர் இரவிந்திரன் மாரையா - 016-4877294  முனைவர் சில்லாழி கந்தசாமி - 016-3221635


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *