அமைச்சர் நான்சி ஷுக்ரியின் கணவர் மரணம்!
- Shan Siva
- 19 Jun, 2026
கோலாலம்பூர், ஜூன் 19: மகளிர், குடும்பம் மற்றும் சமூக நல மேம்பாட்டுத் துறை அமைச்சர் நான்சி ஷுக்ரியின் கணவரான காமில் மிசுவாரி காலமானார். அவருக்கு வயது 65.
சபாவைச் சேர்ந்த அந்த தொழிலதிபர், கோலாலம்பூரில் உள்ள அம்பாங் மருத்துவமனையில் நேற்று மாலை 6.38 மணிக்கு காலமானார் என்று நான்சியின் அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அவரது உடல் இன்று சரவாக்கின் கூச்சிங்கிற்கு கொண்டுவரப்படும்.
சமாரியாங் முஸ்லிம் மயானத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுவதற்கு முன்பு, பொதுமக்கள் இன்று பெட்ரா ஜெயாவில் உள்ள ஜாலான் மெங்கெரிஸ், தமான் செரிராவில் அமைந்துள்ள நான்சியின் இல்லத்தில் இறுதி அஞ்சலி செலுத்தலாம்.
காமில் மற்றும் நான்சி 1985-ல் திருமணம் செய்து கொண்டனர், இவர்களுக்கு ஃபாரோஸ், ஃபாரூக் மற்றும் பீபி என மூன்று குழந்தைகள் உள்ளனர்.
அவரது மறைவுக்கு பிரதமர் மற்றும் அவரது துணைவியார் உட்பட பலரும் தங்கள் இரங்கலைத் தெரிவித்துள்ளனர்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



