தேசிய தடகள முன்னாள் வீரர் சரவணனுக்கு அமைச்சர் தௌஃபிக் உதவி!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஏப் 13: மோட்டார் நியூரோன் நோயால் (MND) பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் தேசிய நடைப்பயிற்சி வீரர் ஜி. சரவணனை, இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் தௌஃபிக் ஜொஹாரி சந்தித்து, தனது அமைச்சகத்தின் நிதிப் பங்களிப்பை வழங்கினார்.

சரவணனின் நலனுக்கு அமைச்சகம் தொடர்ந்து உதவி செய்து மேற்பார்வையிடும் என்றும், நாட்டிற்கு சர்வதேசப் பெருமையைக் கொண்டு வந்த மூத்த விளையாட்டு வீரர்களின் நலனைப் புறக்கணிக்காது என்றும் தௌஃபிக் கூறினார்.

அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் வழங்கப்படும் உதவி போதுமானதாக இருப்பதை உறுதி செய்வதற்காக, அமைச்சகமும் தேசிய விளையாட்டு வீரர்கள் நல அறக்கட்டளையும் (Yakeb), பிசியோதெரபி, மருத்துவ சிகிச்சை மற்றும் பிற மாதாந்திர செலவுகள் உட்பட, அவரது தற்போதைய தேவைகளையும் மருத்துவச் செலவுகளையும் மதிப்பிட்டு வருகின்றனஎன்று பினாங்கு, புக்கிட் மெர்தாஜாமில் நடந்த சந்திப்பிற்குப் பிறகு அவர் தெரிவித்தார்.

மலேசியாவின்  காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் ஒரே தடகள தங்கப் பதக்க வெற்றியாளரான 56 வயதான சரவணனுக்கு, 2021-ல் MND நோய் இருப்பது கண்டறியப்பட்டது. தற்போது அவர் உணவூட்டுக் குழாயைச் சார்ந்து இருப்பதால், அவருக்குத் தொடர்ச்சியான கவனிப்பு தேவைப்படுகிறது.

MND நோயுடனான அவரது போராட்டம், படிப்படியாக நடக்கும், பேசும் மற்றும் உண்ணும் திறனைப் பறித்துவிட்டது .

தௌஃபிக், சரவணனைச் சந்திக்க சுமார் அரை மணி நேரம் அமைச்சர் செலவிட்டார். அப்போது அவருக்குத் தனது தனிப்பட்ட பங்களிப்பையும் வழங்கினார்.
சரவணன் நோய்வாய்ப்பட்டதிலிருந்து, அவரது குடும்பத்தின் நிதிச் சுமையைக் குறைப்பதற்காக மாதந்தோறும் RM500 பங்களிப்பு உட்பட, அறக்கட்டளை பல்வேறு வகையான உதவிகளை வழங்கி வருவதாக யாகேப் தலைவர் அஹ்மத் ஷபாவி இஸ்மாயில் கூறினார்.

யாகேப், சரவணனுக்கு RM30,000-க்கும் அதிகமான தொகையை வழங்கியுள்ளது. அவருக்கு நோய் இருப்பது கண்டறியப்பட்டதிலிருந்து, நாங்கள் அவரது நோயின் முன்னேற்றத்தைக் கண்காணித்து வருகிறோம், மேலும் அவரது குடும்பத்திற்கு உதவ தங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம், என்று அவர் கூறினார்.

சரவணனின் மனைவி, 53 வயதான எம். சசிகலா, அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், லேசான முன்னேற்றம் தென்படுவதாகவும் கூறினார், இருப்பினும், இரவில் அவரது சுவாசத்திற்கு உதவ அவருக்கு இன்னும் வென்டிலேட்டர் தேவைப்படுகிறது என்று தெரிவித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *