பாதரசம் கொண்ட அழகுசாதனப் பொருளின் அறிவிப்பை ரத்து செய்த சுகாதார அமைச்சு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜன 17:

மெர்குரி எனப்படும் பாதரசம் கொண்ட அழகுசாதனப் பொருளுக்கான அறிவிப்பை சுகாதார அமைச்சகம் ரத்து செய்து, அதன் விற்பனை மற்றும் விநியோகத்தை தடை செய்துள்ளது.

உள்ளூர் செல்வாக்குமிக்க ஒருவருக்குச் சொந்தமான ஜே.எல். ஃபாரா என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட White Horse Gluta Seaweed Night Cream என்ற தயாரிப்பில் விஷத்தன்மைமிக்க மெர்குரி இருப்பதால், அதைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு அமைச்சு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.

அழகுசாதனப் பொருட்களில் பாதரசம் தடைசெய்யப்பட்டுள்ளது. ஏனெனில் அது உடலில் உறிஞ்சப்பட்டு சிறுநீரகம் மற்றும் நரம்பு மண்டலத்திற்கு சேதம் விளைவிக்கும்.
இது இளம் குழந்தைகள் அல்லது கருவில் இருக்கும் குழந்தைகளுக்குக் கூட மூளை வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.  தடிப்புகள், எரிச்சல் மற்றும் பிற தோல் பிரச்சினைகளுக்கும் மெர்குரி வழிவகுக்கும் தன்மை உடையது என்று சுகாதார அமைச்சு கூறியது.

இந்த தயாரிப்பை விற்பனை செய்வதும் விநியோகிப்பதும் மருந்து மற்றும் அழகு சாதனப் பொருட்கள் கட்டுப்பாட்டு விதிமுறைகள் 1984 இன்படி விதி  மீறல் என்று அமைச்சு விளக்கியது.இதன் கீழ் குற்றவாளிகள் RM25,000 வரை அபராதம், மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்க வகைசெய்யப்படலாம்.

இந்தக் குற்றங்களைச் செய்யும் நிறுவனங்களுக்கு முதல் குற்றத்திற்கு RM50,000 வரையிலும், அடுத்தடுத்த குற்றங்களுக்கு RM100,000 வரையிலும் அபராதம் விதிக்கப்படலாம்.
ஏற்கனவே இந்த தயாரிப்பைப் பயன்படுத்தியவர்கள், அதன் பயன்பாட்டை உடனடியாக நிறுத்திவிட்டு, ஏதேனும் அசௌகரியம் அல்லது பாதகமான விளைவுகளை சந்தித்தால், ஒரு சுகாதார நிபுணரை அணுகுமாறு அமைச்சு அறிவுறுத்தியது!


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *