அடுத்த தலைமுறையின் முன்னோடி! - ஓம்ஸ் பா.தியாகராஜன்

top-news

ஷா ஆலம், நவம்பர் 11: சிலாங்கூர் மாநில பணி ஓய்வு பெற்ற தமிழாசிரியர் மன்றத்தின் தீபாவளி விருந்துபசரிப்பு, ஷா ஆலம் ராயல் கிளப்பில் ஞாயிற்றுக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது.

மலேசிய அரிமா சங்கத்தின் தோற்றுநரும், ஓம்ஸ் அறவாரியத்தின் தலைவருமான ஓம்ஸ் பா.தியாகராஜன் சிறப்பு வருகை மேற்கொண்டார். மேலும் பல முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

சிலாங்கூர் மாநில பணி ஓய்வு பெற்ற தமிழாசிரியர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.

நிகழ்வில் பேசிய ஓம்ஸ் பா.தியாகராஜன், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்ற ஆசிரியர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்கிறீர்கள். நீங்கள்தான் அடுத்த தலைமுறைக்கு முன்னோடியாக இருக்க வேண்டும். சிலாங்கூர் மாநில பணி ஓய்வு பெற்ற தமிழாசிரியர்கள்ன் சங்கம் வெறும் விருந்து நிகழ்ச்சி என்று மட்டுமல்லாமல், ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஓம்ஸ் அறவாரியத்துடன் இணைந்து சமய வகுப்புகளைச் சிறப்பாகச் செய்து வருகிறார்கள். இதுபோல மற்ற வட்டாரங்களில் உள்ள ஆசிரியர்களும் சமய வகுப்புகளை எடுக்க முயற்சி எடுத்தால் சிறப்பாக இருக்கும் என்று அவர் கேட்டுக்கொண்டார். அதற்கு ஓம்ஸ் அறவாரியம் உறுதுணையாக இருக்கும் என்று அவர் உறுதியளித்தார். மேலும் ஒரு முக்கியமான திட்டம் ஒன்றை வைத்திருக்கிறோம். அதனையும் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் வழி நடத்தவே எண்ணம் கொண்டுள்ளோம். அதனையும் அறிவிப்போம் என்று அவர் நம்பிக்கையளித்ததோடு, ஏற்பாட்டுக் குழுவினர் மற்றும் வருகை புரிந்தோருக்கு  நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டார்!

 

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்