புதருக்குள் 14 வயது சிறுமிகளின் சடலம்! கொலையா?அதிரடியாகக் களமிறங்கும் காவல்துறை!
- THINAGAREN SANGGAREN
- 26 Jul, 2026
ஜூலை 26,
ஈப்போவில்
சுமார் 13 ஆண்டுகளுக்கும் மேலாகக் கைவிடப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புப்
பகுதியின் வளாகத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட 14 வயதுள்ள இரு மாணவிகள் உடல்
பிரேதப் பரிசோதனையில் இருக்கும் நிலையில் தவறானத் தகவல்களைப் பரப்ப வேண்டாம் என
பேராக் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk
Mohd Alwi Zainal Abidin பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார். நேற்று
மாலை 4.50 மணிக்கு இரு சிறுமிகளின் உடல் சடலமாக மீட்கப்பட்டது முதல் காவல்துறை
தொடர்ந்து விசாரணைகள் மேற்கொண்டு வருவதாகவும் இச்சம்பவம் ஒரு கொலையாக இருக்கும்
என்பது போன்ற ஆதாரமற்ற தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்றும் Datuk Mohd Alwi
Zainal Abidin கேட்டுக்கொண்டார்.
இச்சம்பவத்தால்
பாதிக்கப்பட்ட இரு சிறுமிகளின் குடும்பத்தினர்கள் இதனால் பெரும் மன உளைச்சல்
அடைந்துள்ளனர். அவர்களுக்கு ஆதரவாகச் சமூகநலத்துறையின் ஆதரவாளர்கள் உள்ளனர்.
பொதுமக்கள் இச்சம்பவம் குறித்து ஏதேனும் சாட்சிகள் அல்லது ஆதாரங்களை வழங்க
வேண்டும் என நினைத்தால் தயவு செய்து சமூகவலைத்தலங்களில் பகிராமல் அருகிலுள்ள காவல்
நிலையத்தில் பகிரும்படி பேராக் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Mohd Alwi Zainal Abidin கேட்டுக்கொண்டார். உயிரிழந்த சிறுமிகளின் புகைப்படங்களைச்
சமூகவலைத்தலங்களில் பகிர்வதைத் தவிர்க்கும்படியும் ஊடகங்களுக்கு Datuk Mohd
Alwi Zainal Abidin வலியுறுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



