கல்வி அமைச்சின் பூமிப்புத்ரா சலுகைகள் நீக்கம்!
- THINAGAREN SANGGAREN
- 23 Sep, 2026
செப்டம்பர் 23,
IPS எனப்படும் தனியார் பிரித்தியேகக் கல்வி நிறுவனங்களில் 30% பூமிப்புத்ராக்களுக்கு இடமளிக்கப்பட வேண்டும் என்கிற நிபந்தனையைக் கல்வி அமைச்சு நீக்கியுள்ளது. இது நாள் வரையில் தனியார் TUITION களில் 30% புமிப்புத்ராக்கள் இருக்க வேண்டும் என்கிற நிபந்தனை பூமிப்புத்ரா பங்குரிமையாக இருந்த நிலையில் தற்போது அந்த கட்டாய நிபந்தனை ரத்து செய்யப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தனியார் நிறுவனங்களால் நடத்தப்படும் பெரிய அளவிலான தனியார் கல்வி நிறுவனங்கள் இந்த நிபந்தனையால் பாதிக்கப்பட்டிருப்பதைக் கல்வி அமைச்சு உணர்ந்திருப்பதாகவும் அரசுப் பள்ளிகளில் இலவச வகுப்புகள் நடத்தப்படுவதாலும் இந்த கட்டாய 30% பூமிப்புத்ரா பங்குரிமை ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. கடந்த 2006 ஆம் ஆண்டு அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களிலும் 30% பூமிப்புத்ராக்கள் இருக்க வேண்டும் என்கிற நிபந்தனையை அப்போதைய கல்வி அமைச்சர் Hishammuddin Hussein அமல்படுத்திய போது பல தரப்பட்ட சமூகங்களிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பியது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



