ஹார்முஸ் நீரிணை முழுமையாக மூடப்பட்டது: ஈரான் ராணுவம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
- Surendran Sumdraraj
- 11 Jun, 2026
டெஹ்ரான், ஜூன் 11 –
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்முஸ் நீரிணை அனைத்து கப்பல் போக்குவரத்திற்கும் முழுமையாக மூடப்படுவதாக ஈரான் ராணுவத்தின் மத்திய தலைமையகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை அமெரிக்காவின் அண்மைய இராணுவத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் ராணுவம் வெளியிட்டுள்ள எச்சரிக்கையின்படி, ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்ல முயற்சிக்கும் எந்தவொரு கப்பலும் தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உலகின் மிக முக்கியமான எண்ணெய் வர்த்தகப் பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பு குறித்த கவலைகள் அதிகரித்துள்ளன.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் விலை உயர்வு பதிவாகியுள்ளது. உலகளாவிய எரிசக்தி விநியோகம் மற்றும் கடல்சார் வர்த்தகத்தில் கடுமையான பாதிப்புகள் ஏற்படலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது.
இதற்கிடையில், அமெரிக்க தரப்பு, வணிகக் கப்பல்களின் இயக்கம் தொடர்பான நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், பிராந்தியத்தில் தனது பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடரும் என்றும் தெரிவித்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



