பினாங்கு சட்டநிறுவனத்தில் தீ! மூத்த வழக்கறிஞர், உதவியாளர் மரணம்!
- Shan Siva
- 13 Apr, 2026
ஜார்ஜ் டவுன், ஏப் 13: பினாங்கு, ஜார்ஜ் டவுன் கிங்
தெருவில் உள்ள ஒரு சட்ட நிறுவனத்தில் இன்று பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்தில்,
ஒரு மூத்த வழக்கறிஞரும் ஒரு அலுவலக உதவியாளரும்
உயிரிழந்தனர்.
சுமார் 12.15 மணியளவில் தீ விபத்து குறித்து தங்களுக்குத்
தகவல் கிடைத்ததாக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது. இந்தத் தீ
விபத்தில் இரண்டு மாடிக் கட்டிடத்தின் 70% பகுதி அழிந்துவிட்டதாக அத்துறை தெரிவித்தது.
ஆரம்பத்தில், இரண்டு பேர் சிக்கியிருக்கலாம் என்று
நம்பப்படுவதாக அத்துறை கூறியது. பின்னர், மலேசிய வழக்கறிஞர் சங்கத்தின் மூத்த உறுப்பினரான 88 வயது ஜி சான் மார்கன் தீ விபத்தில் உயிரிழந்ததாக பினாங்கு
திட்டமிடல் மேல்முறையீட்டு வாரியத்தின் துணைத் தலைவர் மல்கித் சிங் தெரிவித்ததாக
FMT
செய்தி வெளியிட்டுள்ளது. சான் மார்கன் அந்த வாரியத்தின் உறுப்பினராகவும்
இருந்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



