செராஸில் பட்டாசுக் கடையில் தீ விபத்து!

- Shan Siva
- 12 Feb, 2025
செராஸ், பிப் 12: ஜாலான் டத்தாரன் செராஸ் 6, டத்தாரான்
பெர்னியாகான் செராஸில் நேற்று இரவு ஒரு பட்டாசுக் கடை தீப்பிடித்து எரிந்ததில் ஐந்து
வாகனங்கள் எரிந்து நாசமாகின.
சம்பவம் குறித்து இரவு 9.53 மணிக்கு தகவல் கிடைத்ததாக சிலாங்கூர் தீயணைப்பு
மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்,
பட்டாசுக் கடை முழுவதுமாக தீயில் மூழ்கியது. தீ பரவி டொயோட்டா வெல்ஃபயர், பெரோடுவா பெஸ்ஸா மற்றும் புரோட்டான் சாகா உட்பட ஐந்து வாகனங்கள் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களை அழித்தது. எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் தீ விபத்துக்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது என்றும் அவர் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *