இரண்டாவது நாளாக தொடர்ந்து தீயணைப்புப் பணிகள் நடைபெறுகிறது!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மார்ச் 25:

பகாங், பெக்கான், நெனாசில் உள்ள ஒரு செம்பனைத் தோட்டத்தில், தொடர்ந்து இரண்டாவது நாளாக தீயணைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.500 ஹெக்டேர் தோட்டத்தில் சுமார் 150 ஹெக்டேர் பரப்பளவைப் பாதித்த தீயை தனது குழுவினர் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டதாக பகாங் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் துணை இயக்குநர் வான் அஹ்மத் ஃபதில்லா வான் அப்துல் ரஹ்மான்  கூறினார்.இதுவரை, 48 ஹெக்டேர் பரப்பளவில் தீ அணைக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு தரைவழி அணுகல் குறைவாக இருப்பதால், தீயணைப்பு முயற்சிகளை விரைவுபடுத்துவதற்காக, துறையின் வான்வழிப் பிரிவின் உதவியைக் கோரி ஒரு கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளதாக வான் ஃபதில்லா கூறினார்.கோலா ரொம்பினில் உள்ள கம்போங் ஜெமேரியில், சுமார் 292 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்ட மற்றொரு செம்பனைத் தோட்டத்திலும், தொடர்ந்து இரண்டாவது நாளாக தீயணைப்புப் பணிகள் நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.

இதுவரை 6.07 ஹெக்டேர் பரப்பளவில் தீ அணைக்கப்பட்டு உள்ளது, மீதமுள்ள பகுதி சுமார் 286 ஹெக்டேர் என மதிப்பிடப்பட்டு உள்ளது என்று அவர் கூறினார்.நெனாஸ் மற்றும் கோலா ரொம்பின் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களைச் சேர்ந்த 28 பணியாளர்கள் இந்த இரண்டு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டதாக வான் ஃபதில்லா கூறினார். இதுவரை எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை  என்றும் அவர் மேலும் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *