லாபுவானில் தீ! – 42 குடும்பங்களின் வீடுகள் தீக்கிரையாகின

top-news
FREE WEBSITE AD

லாபுவான், ஜன 1: லாபுவான் தீவில் உள்ள கம்போங் முஸ்லிம் அகதிகள் குடியிருப்பில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 42 குடும்பங்களைச் சேர்ந்த 261 பேர் வீடிழந்துள்ளனர்.

இன்று காலை 10 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் அகதிகள் குடியேற்ற அமைப்பில் இருந்த 39 மரக் குடிசை வீடுகள் எரிந்து நாசமானது.

இது தொடர்பாக காலை 10.47 மணிக்கு ஒரு பேரிடர் அழைப்பு வந்ததாகவும், உடனடியாக தீயணைப்பு வீரர்களை சம்பவ இடத்திற்கு அனுப்பியதாகவும் Labuan தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குனர் அப்துல் ரஹ்மான் அலி கூறினார்.

உள்ளூர் மக்களின் உதவியால் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

சுமார் 1,700 பேர் வசிக்கும் இக்குடியிருப்புகளில் 334 வீடுகள் இருப்பதாக அவர் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *