வரிசை வீடுகளில் தீ! 11 குடும்பங்கள் பாதிப்பு
- Shan Siva
- 24 Jan, 2025
பிந்துலு: Sebauh மாவட்டத்தில் உள்ள Tuai Rumah Beji Utek வரிசை வீடுகள் தீயில் எரிந்ததால், 11 குடும்பங்கள் வீடுகளை இழந்து பரிதாபத்திற்குள்ளாகினர். நீடித்து நிலைக்காத பொருட்களால் கட்டப்பட்ட பாரம்பரிய ஈபான் வீடுகள் அவை என்பதால், தீயில் நாசமானதாக சரவாக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயல்பாட்டு மையத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இந்த தீ விபத்து தொடர்பாக பிந்துலு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு இரவு 10.58 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
குடியிருப்பாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேறியதால், காயங்களோ உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



