ஆயுதங்களுடன் கள்ளப் படகில் வந்த அந்நிய நாட்டவர் மீது துப்பாக்கிச் சூடு! ஒருவர் பலி; நால்வர் காயம்!

top-news
FREE WEBSITE AD

ஷா ஆலம், ஜன 25: நேற்று செர்டாங்கில் உள்ள மருத்துவமனையில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு ஆளாகி, சிகிச்சை பெற்ற வெளிநாட்டவர்கள் என நம்பப்படும் மூன்று பேர் குறித்த புகாரைப் பெற்றதை சிலாங்கூர் போலீஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

 செர்டாங்கில் உள்ள சுல்தான் இட்ரிஸ் ஷா மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் காலை 7.30 மணியளவில் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்ட பிறகு, மருத்துவ அதிகாரி ஒருவரால் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் ஹுசைன் ஒமர் கான் தெரிவித்தார்.

அனைத்து நோயாளிகளின் உடலிலும் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் இருந்ததாகவும், சுயநினைவு நிலையில் இருப்பதாகவும் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நேற்று அதிகாலை தஞ்சோங் ரூவில் ரோந்து கடமையில் ஈடுபட்டிருந்த மலேசிய கடல்சார் அமலாக்க முகமையின் (எம்எம்இஏ) கப்பலில் மோதிய படகில் இருந்த ஐந்து பேரில் இவர்களும் இருந்ததாக நம்பப்படுகிறது.

சம்பவத்தில், MMEA உறுப்பினர்கள் தற்காப்புக்காக பல துப்பாக்கிச் சூடுகளை மேற்கொண்டனர், அப்போது படகில் இருந்து இரண்டு சந்தேக நபர்கள் ஆயுதங்களுடன் அவர்களைத் தாக்கியிருப்பதாக ஹுசைன் கூறினார்.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.  காயமடைந்தவர்களில் மூவர் செர்டாங்கில் உள்ள மருத்துவமனைக்கும், மற்றவர் கிள்ளான் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

பலியானவர்கள் அனைவரும் வெளிநாட்டினர் என நம்பப்படுகிறது ஆனால் அவர்களின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இதற்கிடையில், சிலாங்கூர் கடல்சார் இயக்குனர் அப்துல் முஹைமின் சல்லே, ஒரு தனி அறிக்கையில், கேரி தீவில் இருந்து தென்மேற்கே 0.4 கடல் மைல் தொலைவில் சிக்கித் தவிக்கும் ஃபைபர் படகு குறித்து பொதுமக்களிடம் இருந்து MMEA க்கு தகவல் கிடைத்ததாகத் தெரிவித்துள்ளார்.

 இந்தோனேசியர்கள் என்று சந்தேகிக்கப்படும் இரண்டு பேர் படகில் கண்டுபிடிக்கப்பட்டனர்.  ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது, மற்றவர் காயமடைந்து கிள்ளான் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்  என்று அவர் குறிப்பிட்டுள்ளார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *