சீனர்களைப் பயம் காட்டும் DAP - ஓன் ஹஃபீஸ் குற்றச்சாட்டு

top-news
FREE WEBSITE AD

பத்து பஹாட், ஜூலை 1: வரவிருக்கும் ஜொகூர் மாநில தேர்தலில் பாரிசான் நேஷனல் வேட்பாளர்களை ஆதரிக்கும் பாஸ் கட்சியின் நடவடிக்கையை ஓர்  இனப் பிரச்சினையாகப் பார்க்கக்கூடாது என்று ஜொகூர் தற்காலிக முதலமைச்சர் டத்தோ ஓன் ஹஃபிஸ் கூறியுள்ளார்.

சீன சமூகத்தை அச்சுறுத்துவதற்காக டிஏபி தலைவர்களால் இந்தக் கதை பரப்பப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட டத்தோ ஓன் ஹபீஸ் காசி, பாரிசானுக்கு பாஸ் அளிக்கும் ஆதரவை வரவேற்றதோடு, கடந்த காலங்களில் டிஏபியும் பாஸ் கட்சியுடன் இணைந்து பணியாற்றியுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

முன்பு எந்தப் பிரச்சினையும் இல்லை, ஆனால் இப்போது பாஸ் கட்சி பாரிசானை ஆதரிப்பதால், இது ஓர் இனப் பிரச்சினையாக மாற்றப்பட்டுள்ளது என்று கூறினார்.

டிஏபி தலைவர்கள் கூறும் அனைத்துக் கருத்துகளையும் நம்பாத அளவுக்கு ஜொகூர் மக்கள் முதிர்ச்சியும் விவேகமும் கொண்டவர்கள் என்று தாம் உறுதியாக நம்புவதாக தேர்தல் இயந்திரங்களை ஆய்வு செய்ய வந்த பிறகு அவர் கூறினார்.

இந்த நிகழ்வில் பாஸ் பிரதிநிதியும் கலந்துகொண்டது குறித்துக் கேள்விக்கு,  ​​பாரிசான் வேட்பாளரை ஆதரிக்க அவர்களும் வந்திருப்பது தன்னை உண்மையில் நெகிழச் செய்ததாகவும் அதிர்ச்சியடையச் செய்ததாகவும் ஒன் ஹபீஸ் கூறினார்.

இது மேலும் பலர் வந்து பாரிசானுக்கு வாக்களிக்க வழிவகுக்கும் என்று தாம் நம்புவதாக   அவர் மேலும் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *