உடல் நலம் காரணமாக தேசிய வீரர் தின அணிவகுப்பில் மாமன்னர் கலந்துகொள்ளவில்லை! - அரண்மனை அறிவிப்பு
- Shan Siva
- 31 Jul, 2026
கோலாலம்பூர், ஜூலை 31: மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அவர்களின் முதுகு மற்றும் இடுப்பில் ஏற்பட்டுள்ள தசை மற்றும் எலும்பு வலிக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்படும் என்று இஸ்தானா நெகாரா இன்று தெரிவித்தது.
சிகிச்சைக்கு முன்னதாக, குணமடைவதை எளிதாக்கும் வகையில் ஓய்வெடுக்குமாறு மருத்துவ நிபுணர்கள் சுல்தான் இப்ராஹிமுக்கு அறிவுறுத்தியுள்ளதாக அரண்மனை ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதன் விளைவாக, இன்று புத்ராஜயாவில் உள்ள டத்தாரான் பஹ்லவான் நெகாராவில் நடைபெறும் வீரர் தின அணிவகுப்பு விழாவில் மாட்சிமை பொருந்திய மன்னரால் கலந்துகொள்ள இயலவில்லை என்றும் அது கூறியது.
இன்று காலை நடைபெற்ற வீரர் தின அணிவகுப்பில் பிரதமர் அன்வார் இப்ராஹிம் மற்றும் அவரது மனைவி டாக்டர் வான் அஜிஸா வான் இஸ்மாயில் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும், உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில், பாதுகாப்பு அமைச்சர் காலித் நோர்டின், பாதுகாப்புப் படைத் தலைவர் மாலிக் ரசாக் சுலைமான் மற்றும் தேசிய காவல்துற தலைவர் காலித் இஸ்மாயில் ஆகியோரும் உடனிருந்தனர்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



