ஏமாற்றமளிக்கிறது! - நஜிப் மகள் வருத்தம்
- Shan Siva
- 07 Nov, 2026
கோலாலம்பூர், நவ 7:முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கின் வீட்டுக்காவல் உத்தரவை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்படுவது ஏமாற்றம் அளிப்பதாக அவரது மகள் நூர்யானா நஜ்வா தெரிவித்துள்ளார்.
நஜிப்புக்கு விதிக்கப்பட்ட 5 கோடி ரிங்கிட் அபராதத்தைச் செலுத்தி, நிபந்தனையுடனான அரச மன்னிப்பு உத்தரவில் குறிப்பிடப்பட்ட அனைத்து நடைமுறைகளையும் குடும்பத்தினர் நிறைவேற்றியுள்ளதாக அவர் கூறினார்.
கூடுதல் நிபந்தனைகள் ஏதேனும் இருந்தால், அவற்றை ஆரம்பத்திலேயே ஏன் தெரிவிக்கவில்லை என்றும், இன்னும் தடைகள் இருந்தால் அபராதத் தொகையை ஏன் ஏற்றுக்கொண்டார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
தமது தந்தை வீட்டுக்குத் திரும்பும் நேரம் நெருங்கிவிட்டதாக நினைக்கும் ஒவ்வொரு முறையும் புதிய தடைகள் உருவாகி வருவதாகவும், தமது குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் அரச உத்தரவு மதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

