994 குடிநுழைவுத்துறை அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை! 77 அதிகாரிகள் பணிநீக்கம்
- Shan Siva
- 27 May, 2026
கிள்ளான், மே 27: 2022-ஆம் ஆண்டு முதல் வெற்றிகரமாகத் தீர்க்கப்பட்ட 994 ஒழுங்கு நடவடிக்கைகளில், 77 அதிகாரிகள் குடிநுழைவுத் துறையில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று அதன் தலைமை இயக்குநர் ஜகாரியா ஷாபான் தெரிவித்தார்.
மேலும், இந்த ஆண்டு இதுவரை 23 ஒழுங்கு நடவடிக்கைகள் தீர்க்கப்பட்டுள்ளதாகவும், துறைக்குள் நேர்மையை வலுப்படுத்தவும் முறைகேடுகளைக் கட்டுப்படுத்தவும் எட்டு அதிகாரிகளுக்குத் தண்டனை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜகாரியா கூறினார்.
அவர்களின் பதவி எதுவாக இருந்தாலும், ஆதாரங்களின் அடிப்படையில் நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்று அவர் இன்று பெரானாங்கில் உள்ள மில்லினியம் தற்காலிக குடிநுழைவு முகாமில், ஹரி ராயா ஐடில் அதாவை முன்னிட்டு நடைபெற்ற 'ஜெலாஜா வீரா மதானி' நிகழ்ச்சியின் போது செய்தியாளர் சந்திப்பில் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



