எஎம்எம் வட்டார பொருளாதார ஒருங்கிணைப்பு உட்பட விவகாரங்கள் கவனம் செலுத்தப்படுகிறது!

top-news
FREE WEBSITE AD

லங்காவி, ஜன. 20-

வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முஹமட் ஹசான் நேற்று ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள், எஎம்எம்கான கூட்டத்தைத் தொடக்கி வைத்தார்.இதில் வளர்ந்து வரும்
உலகளாவிய மாற்றங்களை எதிர்கொள்ள வட்டார பொருளாதார ஒருங்கிணைப்பு. காலநிலை தயார்நிலை மற்றும் உள்ளடக்கிய தன்மை ஆகியவற்றில் ஆசியான் கருத்தில் கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து கவனம் செலுத்தப்படுகிறது.

நேற்று கெடா, லங்காவி அனைத்துலக மாநாட்டு மையம், எல்ஐசிசியில் இக்கூட்டம் நடைபெற்றது.ஆசியானின் கூட்டுத் திறனை கோடி காட்டி டத்தோஸ்ரீ முஹமட், 38 லட்சம் கோடி அமெரிக்க டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 67 கோடியே 70 லட்சம் மக்கள்தொகையுடன் உலகளவில் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக அந்த அமைப்பின் நிலையைக் குறிப்பிட்டார். வட்டாரங்களுக்கு இடையேயான வர்த்தகம், முதலீடு தொடர்ந்து நடைபெற வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

2025ஆம் ஆண்டில் மலேசியாவின் ஆசியான் தலைமையின் கீழ் நடைபெறும் முதல் பெரிய கூட்டத்தை, எஎம்எம் காட்டுகின்றது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *