ISMAIL SABRI நல்லவர்! மகாதீர் வருத்தம்!
.jpg)
- Sangeetha K Loganathan
- 11 Mar, 2025
மார்ச் 11,
முன்னாள் பிரதமர் Datuk Seri Ismail Sabri -க்கு எதிரான RM177 மில்லியன் தொடர்புடைய சொத்துக் குவிப்பு வழக்கு பெரும் அதிர்ச்சியளிப்பதாக முன்னாள் பிரதமர் Tun Dr Mahathir Mohamad தெரிவித்துள்ளார். பொறுமையான அரசியல் தலைவராக அறியப்பட்ட Datuk Seri Ismail Sabri சந்தேக நபராக லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தால் விசாரிக்கப்பட்டிருப்பது மிகவும் வேதனை அளிப்பதாகவும் அதிர்ச்சியிலிருந்து தாம் இன்னும் மீளவில்லை என்றும் மகாதீர் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் SAFE HOUSE-லிருந்து RM7 மில்லியன் மதிப்புள்ள 16 கிலோகிராம் தங்கக் கட்டிகளும் RM170 மில்லியன் மதிப்புள்ள வெளிநாட்டு ரொக்கப் பணத்தையும் SPRM பறிமுதல் செய்தததன் பின்னனியில் Ismail Sabri இருப்பதாகவும் பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கும் Ismail Sabri க்கும் தொடர்பு இருப்பதாகவும் வெளிவரும் செய்திகளைக் காணும் போது வருத்தமாகவும் ஆச்சரியமாகவும் இருப்பதாக மகாதீர் தெரிவித்தார். இது நடக்க வேண்டும் என இருக்கிறது, நடந்திருக்கிறது என்றும் Ismail Sabri இதில் உண்மையாகவே சம்மந்தப்பட்டிருக்கிறதா என்பதை லஞ்ச ஊழல் தடுப்பு ஆணைமான SPRM நியாயமாக விசாரிக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் மகாதீர் வலியுறுத்தியுள்ளார்.
Tun Dr. Mahathir Mohamad meluahkan rasa terkejut dan kecewa berhubung siasatan SPRM terhadap Datuk Seri Ismail Sabri dalam kes pengumpulan aset bernilai RM177 juta. Mahathir menekankan perlunya siasatan yang adil bagi memastikan kebenaran di sebalik dakwaan tersebut.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *