இயேசு சிலையைச் சேதப்படுத்திய இஸ்ரேல் ராணுவ வீரர்கள் 2 பேருக்கு 30 நாள் சிறை தண்டனை

top-news
FREE WEBSITE AD

லெபனானின் தெற்கு பகுதியில் உள்ள கிறிஸ்துவர்கள் வாழும் டெபெல் (Debel) கிராமத்தில் இயேசு சிலையைச் சேதப்படுத்திய சம்பவத்தில், இஸ்ரேல் ராணுவ வீரர்கள் 2 பேருக்கு 30 நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் உலகளவில் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமூக ஊடகங்களில் வைரலான படங்களில், ஒரு ராணுவ வீரர் சுத்தியலால் இயேசு சிலையைத் தாக்கி சேதப்படுத்துவது பதிவாகியிருந்தது. அந்த செயலை மற்றொரு வீரர் படம் பிடித்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய இஸ்ரேல் பாதுகாப்பு படை (IDF), அந்த இரு வீரர்களின் செயல்கள் ராணுவ விதிமுறைகளுக்கும் மதிப்புகளுக்கும் முற்றிலும் முரணானவை என தெரிவித்தது. இதையடுத்து அவர்கள் இருவரும் பணியிலிருந்து நீக்கப்பட்டு, 30 நாட்கள் ராணுவ சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், சம்பவம் நடந்த இடத்தில் இருந்த மற்ற 6 வீரர்கள் தலையிடாமல் இருந்ததற்காக அவர்களுக்கும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் கிறிஸ்தவ மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக உலகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கூட இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *