ஹவுதி தாக்குதல்கள் தீவிரம்: இஸ்ரேலின் உளவுத்துறை உதவியை நாடிய சவுதி அரேபியா

top-news
FREE WEBSITE AD

ரியாத், செப். 17-

ஏமனில் செயல்படும் ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், சவுதி அரேபியா இஸ்ரேலிடம் உளவுத்துறை உதவியை நாடியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவின் மத்திய கட்டளைத் தலைமையகமான சென்ட்காம் (CENTCOM) மூலமாக சவுதி அரேபியா மற்றும் இஸ்ரேல் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாக பிராந்திய தூதரக வட்டாரங்களை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த பேச்சுவார்த்தைகள் முக்கியமாக ஹவுதி படைகளின் நிலைப்பாடுகள், எதிர்கால தாக்குதல் திட்டங்கள் மற்றும் டிரோன், ஏவுகணை அச்சுறுத்தல்கள் குறித்த உளவுத் தகவல்களைப் பகிர்வது தொடர்பாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

ஹவுதிகள் அண்மையில் சவுதி அரேபியாவின் எண்ணெய் கட்டமைப்புகள் மற்றும் நகரங்களை இலக்காகக் கொண்டு தாக்குதல்களை அதிகரித்துள்ளனர். மேலும், செங்கடல் பகுதியில் முக்கிய இடங்களை கைப்பற்றியுள்ளதால், பாப் அல்-மண்டெப் நீரிணையின் பாதுகாப்பு குறித்த கவலையும் அதிகரித்துள்ளது.

இந்தச் சூழலில் சவுதி அரேபியா அமெரிக்கா, பிரிட்டன், எகிப்து உள்ளிட்ட நாடுகளிடமும் பாதுகாப்பு உதவிகளை கோரி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *