வடக்கு இஸ்ரேல் மீது தாக்குதலை நிறுத்தாவிட்டால் லெபனான் மீது தாக்குதல்: இஸ்ரேல் கடும் எச்சரிக்கை
- Surendran Sumdraraj
- 02 Jun, 2026
வடக்கு இஸ்ரேல் பகுதிகள் மீது ஹிஸ்புல்லா அமைப்பு நடத்தி வரும் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்படாவிட்டால், லெபனான் மீது மேலும் தீவிரமான ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என இஸ்ரேல் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹிஸ்புல்லா தொடர்ந்து போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல்களை நடத்தி வருவதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதிகளில் உள்ள ஹிஸ்புல்லா இலக்குகள் மீது தாக்குதல் நடத்த ராணுவத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “வடக்கு இஸ்ரேல் மீது தாக்குதல்கள் தொடர்ந்தால் பெய்ரூட்டில் அமைதி இருக்காது” என்று இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் கட்ஸ் எச்சரித்துள்ளார். ஹிஸ்புல்லா தாக்குதல்களுக்கு எதிராக கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



