PN தான் BN-ன் 'புதிய கூட்டாளி'! மலாய்-முஸ்லிம் ஒற்றுமை நனவாகும் நேரம் வந்துவிட்டது - ஜாஹிட் அறிவிப்பு
- Shan Siva
- 19 Jul, 2026
ஜெம்போல், ஜூலை 19: நெகிரி செம்பிலானில் பாரிசான் நேஷனல் போட்டியிடாத 11 தொகுதிகளில், அதன் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் பெரிகாத்தான் நேஷனலின் வேட்பாளர்களுக்கே வாக்களிப்பார்கள் என்று பாரிசான் நேஷனல் தலைவர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடி கூறியுள்ளார். மேலும், இரு கூட்டணிகளின் தற்போதைய ஒத்துழைப்பு அரசியல் யதார்த்தத்தின் ஒரு பகுதி என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஜொகூரில் செய்தது போலவே, நெகிரி செம்பிலான் தேர்தலிலும் BN-க்கு ஆதரவளிக்குமாறு PN உறுப்பினர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் PAS தலைவர் அப்துல் ஹாடி அவாங் விடுத்த அறிவுறுத்தலுக்கு இணங்கவே இது அமைந்துள்ளது என்று ஜாஹிட் கூறினார்.
"நாங்களும் அவர்களுக்காக அதையே செய்வோம். கட்சி அமைப்பு மட்டுமல்ல, இரு தரப்பு வாக்காளர்களும் இந்த இரு கூட்டணிகளின் தலைமை காட்டும் ஆதரவை வாக்குகளாக மாற்றுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று நேற்று ஃபெல்டா பாலோங் 8-ல் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
முன்னதாக தனது உரையில், PN தான் BN-ன் 'புதிய கூட்டாளி' என்று கூறிய ஜாஹித், ஒரு புதிய அரசியல் சூத்திரத்தை நனவாக்க உதவியதற்காக கூட்டணிக்கு நன்றி தெரிவித்தார். நாங்கள் யாரையும் ஒடுக்க முற்படவில்லை, ஆனால் இந்த நாட்டில் மலாய்-முஸ்லிம் ஒற்றுமை நனவாகும் நேரம் வந்துவிட்டது என்று அவர் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



