இளநிலை மருத்துவர்களின் பணிச்சுமைக்கு தீர்வு: விரைவில் புதிய நெகிழ்வான பணிநேர வழிகாட்டி

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 7-

மருத்துவ பயிற்சி பெறும் இளநிலை மருத்துவர்கள் வாரத்திற்கு 85 மணி நேரம் வரை பணியாற்ற வேண்டிய நிலை குறித்து தொடர்ந்து புகார்கள் எழுந்துவரும் நிலையில், அதற்கான தீர்வாக புதிய “நெகிழ்வான பணிநேர” வழிகாட்டி விரைவில் வெளியிடப்படும் என Menteri Kesihatan, Datuk Seri Dr Dzulkefly Ahmad தெரிவித்துள்ளார்.

கோலாலம்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மருத்துவ பட்டதாரி அதிகாரிகள் (PPS) எதிர்கொள்ளும் அதிகப்படியான பணிச்சுமை குறித்து அமைச்சு தீவிர கவனம் செலுத்தி வருவதாகக் கூறினார். இளநிலை மருத்துவர்களை “கூடுதல் தொழிலாளர் சக்தி” என கருதக்கூடாது என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

2011 ஆம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்ட “நெகிழ்வான பணிநேர” சுற்றறிக்கையை முழுமையாக பின்பற்றச் செய்வதே இந்த புதிய மேம்படுத்தப்பட்ட வழிகாட்டியின் முக்கிய நோக்கமாக இருக்கும் என அவர் தெரிவித்தார். மருத்துவமனைகளில் பணிபுரியும் ஹவுஸ் மேன்கள் தொடர்ந்து நீண்ட நேரம் வேலை செய்வதால் உடல் மற்றும் மன அழுத்தம் அதிகரித்து வருவதாகவும், இது நோயாளி சேவையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாகவும் பல தரப்பினர் கவலை தெரிவித்துள்ளனர்.

இதனால், பணிநேர ஒழுங்குமுறை, ஓய்வு நேரம் மற்றும் பணிச்சுமை பகிர்வு தொடர்பாக தெளிவான நடைமுறைகள் வகுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *