மத நம்பிக்கையை இழிவுப்படுத்தினால் அரசு நடவடிக்கை எடுக்கும்! அன்வார் உறுதி!
- THINAGAREN SANGGAREN
- 01 Mar, 2026
மார்ச் 1,
பல்லின மக்கள் வாழும் மலேசியாவில் எந்தவொரு மத சமய நம்பிக்கையையும் இழிவுப்படுத்தும் நபர்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைக்கு அரசியல் தலையீடுகள் இருக்காது என பிரதமர் அன்வார் உறுதியளித்தார். மத நம்பிக்கையைக் கொண்டிருப்பவர்கள் அரசியல் தலைவர்களுடன் சந்திப்பை நடத்தினாலும் அது பொதுவான ஒரு சந்திப்பாகவோ அல்லது தனிப்பட்ட வகையிலானச் சந்திப்பாக மட்டுமே இருக்கும் என்றும் அவர்களுடைய இழிவான பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்கும் வகையிலான ஒரு சந்திப்பாக அது இருக்காது என பிரதமர் அன்வார் நம்பிக்கை அளித்தார். 3R என்பது இஸ்லாத்தை அவமதிக்கும் நபர்களுக்கு எதிரானது மட்டுமல்ல. அது இந்த நாட்டில் இருக்கும் அனைத்து சமூகத்தின் சமயத்தைப் பாதுகாக்கும் என்பதில் தாம் உறுதியாக இருப்பதாக அன்வார் தெரிவித்தார்.
முன்னதாக இந்து மதத்தின் மீது வன்மங்களை வாரி இரைக்கும் ZAMRI VINOTH, TAMIM DAHRI, FIRDAUS WONG ஆகயோரை அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் AKMAL SALEH, சிலாங்கூர் மெந்திரி பெசார் AMIRUDDIN SHARI ஆகியோர் சந்தித்தது இந்தியர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. பிரதமரின் அரசியல் செயலாளரான DATUK AZMAN ABIDIN கோயில்களுக்கு எதிராகச் செயல்படும் FIRDAUS WONG தலைமையிலானக் குழுவைச் சந்தித்தது மட்டுமின்றி பிரதமரின் அரசியல் செயலாளராக இருக்கும் DATUK AZMAN ABIDIN கூட்டரசு வளாகச் செயலாளராக நியமிக்க பிரதமர் அன்வார் முன்வர வேண்டும் என FIRDAUS WONG தலைமையிலானக் குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



