மதுபோதையால் மரணம் – கடுமையான தண்டனை அவசியம் என அமைச்சர் வலியுறுத்தல்
- Surendran Sumdraraj
- 03 Apr, 2026
கோலாலம்பூர், ஏப். 3-
மதுபோதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் உயிரிழப்பு சம்பவங்களைத் தடுக்கும் நோக்கில், தற்போதுள்ள தண்டனை விதிகள் மேலும் கடுமையாக்கப்பட வேண்டும் என பிரதமர் துறையின் (சட்டம் மற்றும் நிறுவல் சீர்திருத்தம்) அமைச்சர் டத்தோ ஸ்ரீ அசலினா ஒத்மான் சையிட் தெரிவித்தார்.
இத்தகைய குற்றங்களுக்கு விதிக்கப்படும் தண்டனைகள் சமூகத்தில் பயம் உருவாக்கும் அளவுக்கு இருக்க வேண்டியது அவசியம் என்றும், தற்போதைய சட்ட விதிகள் குற்றத்தின் தீவிரத்துடன் ஒப்பிடுகையில் குறைவாக உள்ளதாகவும் அவர் கருத்து வெளியிட்டார்.
குறிப்பாக, மதுபோதையில் வாகனம் ஓட்டுவதால் குற்றமற்ற பொதுமக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலைக்குரியதாகும் என அவர் தெரிவித்தார். இவ்வாறு உயிரிழப்புகள் ஏற்படும்போது, கடுமையான தண்டனைகள் விதிப்பதன் மூலம் மற்றவர்களுக்கு எச்சரிக்கை ஏற்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.
2026 ஆம் ஆண்டு காமன்வெல்த் சட்டக் கல்வி சங்க (CLEA) மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சம்பந்தப்பட்ட அமைச்சுகள் தற்போதைய சட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



