கோயில் விவகாரத்தில் பொறுப்புடன் பேசுங்க! V.PAPPARAIDU!
- THINAGAREN SANGGAREN
- 28 Jun, 2026
ஜூன் 28,
கோயில் விவகாரங்களில் கருத்துகளை வெளியிடும் போது பொறுப்புடன் பேச வேண்டும் என சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் V.PAPPARAIDU வலியுறுத்தினார். சிலாங்கூரில் புதிதாகக் கட்டப்படும் குடியிருப்புப் பகுதிகளில் கோயில்களுக்கு நிலம் வழங்குவதைக் கட்டாயமாக்கியதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கும் பாஸ் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் AHMAD FADHLI SHAARI இந்த விவகாரத்தில் சிலாங்கூர் அரசு முறையான, தெளிவான, சமூகநலனை முன்னிருத்தி செயல்பட்டிருப்பதாக V.PAPPARAIDU தெரிவித்தார்.
பாஸ் கட்சியின் இப்படியான கருத்துகள் பல்லின மக்களிடையே இருக்கும் சமத்துவத்தைச் சீர்குலைப்பதாக V.PAPPARAIDU தெரிவித்தார். சமூகத்தின் தேவையை அறிந்து சிலாங்கூர் மாநில அரசு நடவடிக்கைகள் எடுப்பதாகவும் V.PAPPARAIDU தெரிவித்தார். சிலாங்கூரின் புதிதாகக் கட்டப்படும் குடியிருப்புப் பகுதிகளில் சமய வழிபாட்டுத் தலங்களுக்கான தனி நிலம் வழங்கப்பட வேண்டும் என்பதில் சிலாங்கூர் மாநில அரசு உறதியாக இருப்பதாகவும் V.PAPPARAIDU தெரிவித்தார். இந்த நடைமுறை அரசு குடியிருப்புப் பகுதிகளிலும் கடைப்பிடிக்கப்படும் என V.PAPPARAIDU உறுதியளித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



