திமுக உறுப்பினர்கள் செய்த செயல்தான் வருத்தம் அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்
- Surendran Sumdraraj
- 08 Sep, 2026
சென்னை, செப். 8 –
தமிழக சட்டசபையில் திமுக உறுப்பினர்கள் நடந்து கொண்ட விதம் தமக்கு மிகுந்த வருத்தத்தை அளித்ததாக சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் முதலமைச்சர் விஜய் பேசிய உரையில் இடம்பெற்ற சில கருத்துகளை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று திமுக உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், முதலமைச்சரின் பேச்சை அவைக் குறிப்பில் இருந்து நீக்க முடியாது என்று சபாநாயகர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக எம்.எல்.ஏ.க்கள் எழுந்து நின்று கோஷமிட்டதுடன், சபாநாயகர் இருக்கை முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். நிலைமை கட்டுக்குள் வராததால், அவைக் காவலர்களை அழைத்து சில உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார்.
பின்னர் பேசிய ஜே.சி.டி. பிரபாகர், கடந்த சனிக்கிழமை குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும், முதலமைச்சரின் பதிலுரையைக் கேட்க வேண்டும் என்பதற்காகவே சட்டசபைக்கு வந்ததாகவும் கூறினார்.
“முதலமைச்சர் விஜய் விதிகளுக்கு புறம்பாக எதையும் பேசவில்லை. சட்டமன்றத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற மாண்பு திமுகவுக்கு தெரியும். ஆனால், அவையை நடத்த முடியாத நிலையை உருவாக்கிய திமுக உறுப்பினர்களின் செயல்தான் எனக்கு வருத்தம் அளிக்கிறது,” என்று அவர் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



