சிவகார்த்திகேயன் தயாரிக்கவுள்ள அடுத்த படம் அறிவிப்பு!

top-news
FREE WEBSITE AD

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.ஆர்.ஜே.பாலாஜி நாயகனாக நடிக்கவிருந்த படம் 'ஹாப்பி எண்டிங்'.

இப்படத்தின் ப்ரோமோ இணையத்தில் பரவலாக பேசப்பட்டது. அதன் மூலம் இயக்குநராக அறிமுகமாக இருந்தவர் அம்மமுத்து சூர்யா. ஆனால், அப்படம் கைவிடப்பட்டது. தற்போது அம்மமுத்து சூர்யா இயக்கவுள்ள அடுத்த படத்தினை சிவகார்த்திகேயன் தயாரிக்கவுள்ளார்.

சிவகார்த்திகேயன் அறிமுகப்படுத்தும் அடுத்த இயக்குநராக அம்மமுத்து சூர்யா உறுதிப்படுத்தப்பட்டுள்ளார். முன்னதாக அருண்ராஜா காமராஜ், கார்த்திக் வேணுகோபாலன், சிபி சக்கரவர்த்தி, பி.எஸ்.வினோத்ராஜ், சிவகுமார் முருகேசன் ஆகியோரை இயக்குநராக சிவகார்த்திகேயன் அறிமுகப்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.அம்மமுத்து சூர்யா இயக்கவுள்ள படத்தின் நாயகன் யார் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. விரைவில் இப்படம் குறித்த இதர தகவல்களை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *