2025 பிரிட்டிஷ் ஓபன் காலிறுதிப் போட்டியில் சிவசங்கரி அதிர்ச்சித் தோல்வி!

top-news
FREE WEBSITE AD

பர்மிங்காம், ஜூன் 7-

மலேசியாவின் முன்னணி பெண்கள் ஸ்குவாஷ் வீராங்கனை எஸ். சிவசங்கரி, 2025 பிரிட்டிஷ் ஓபன் காலிறுதியில் எகிப்திய வீராங்கனை அமினா ஓர்ஃபியிடம் 2-11, 11-4, 7-11, 9-11 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

பர்மிங்காம் ரெப்பர்ட்டரி தியேட்டரில் நடைபெற்ற இந்த காலிறுதிப் போட்டியில், உலகத் தரவரிசையில் ஒன்பதாவது இடத்தில் இருக்கும் கெடா வீராங்கனையான சிவசங்கரி, முதல் செட்டை 2-11 என்ற கணக்கில் இழந்தார். இரண்டாவது செட்டில் அபார ஆட்டத்தின் வழி 11-4 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். ஆனால், மூன்றாம் நான்காம் செட்களில் அமினா ஓர்ஃபி ஆதிக்கம் செலுத்தி, 7-11, 9-11 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

சிவசங்கரி இந்தப் போட்டிக்கு முன்பு, மூன்றாவது சுற்றில் ஜப்பானின் 11-9, 11-9, 4-11, 11-4 என்ற கணக்கில் தோற்கடித்து, முதல் முறையாக பிரிட்டிஷ் ஓபன் காலிறுதிக்கு முன்னேறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை மலேசியாவின் முன்னாள் நட்சத்திர வீராங்கனை டத்தோ நிக்கோல் டேவிட் 2017இல் மட்டுமே பிரிட்டிஷ் ஓபன் போட்டியில் அரையிறுதி வரை முன்னேறியிருந்தார். அவரைத் தொடர்ந்து மலேசிய வீராங்கனை ஒருவர் பிரிட்டிஷ் ஓபனில் அடைந்த மிகச் சிறந்த முன்னேற்றமாக சிவசங்கரியைக் காண முடிகிறது.

இப்போட்டியில், முதல் சுற்றில் இந்தியாவின் அஹனத் சிங்கை 12-10. 9-11, 11-8, 11-7 கணக்கில் வென்றார் சிவசங்கரி. அதுமட்டுமல்லாது, காலிறுதிக்குத் தகுதி பெற்ற ஒரே மலேசியா பெண் பிரதிநிதியாகவும் சிவசங்கரி திகழ்ந்தார். மற்ற மலேசிய வீராங்கனைகளான ஐரா அஸ்மான், நூர் ஐனா அமானி ஆரம்ப சுற்றுகளில் வெளியேறினர்.

ஆண்கள் பிரிவில் மலேசியாவின் முன்னணி வீரர் என்ஜி இயின் யோவ் இரண்டாவது சுற்றில் தோல்வியடைந்தார்.பிரிட்டிஷ் ஓபன் போட்டி ஸ்குவாஷ் உலகில் மிகவும் மதிப்புமிக்க தொடர்களில் ஒன்றாகும். இவ்வாண்டு அப்போட்டியில் உலகின் சிறந்த 96 வீரர்கள் பங்கேற்கின்றனர்.

S. Sivasangari tewas kepada Amina Orfi di suku akhir British Open 2025. Beliau pemain wanita Malaysia pertama mara sejauh itu sejak Nicol David pada 2017, menunjukkan pencapaian membanggakan dalam skuasy walaupun gagal ke separuh akhir.





ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *